கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரில் ஓட்டுநரான செந்தில்குமார்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாருக்கு முனியாண்டி(38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் முனியாண்டிக்கு மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர். இதனை அடுத்து முனியாண்டிக்கு சரஸ்வதிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
நேற்று முன்தினம் முனியாண்டி சரஸ்வதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு முனியாண்டியும், சரஸ்வதியும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கள்ளக்காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால் சரஸ்வதியும், முனியாண்டியும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.