வீட்டில் இருந்து வெளியே சென்ற பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் எடுத்துள்ளேன் குஞ்சாயூர் பூச்சிக்கார தோட்டத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்ற பழனியம்மாள் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த கிணறு அருகே பழனியம்மாளின் செருப்பு ஒன்று கிடந்துள்ளது.
இதனைதொடர்ந்து சந்தேகமடைந்த அப்பகுதியினர் கிணற்றில் இறங்கி பார்த்தபோது பழனியம்மாளின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற மோகனூர் காவல் துறையினர் கிணற்றில் கிடந்த பழனியம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.