கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான முகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த குடும்பத்தினர் முகேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.