கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோசலை என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஆகியும் செல்வராஜ் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது செல்வராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து செல்வராஜின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.