Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் விசாக் என்பவர் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்து சினிமா துறையில் உதவி எடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விசாக் தனது அறையின் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பத்மநாபன் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |