பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த ஜோதி மலை வேப்பிலையை அரைத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஜோதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.