Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்? மாணவி எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்…!!

விரக்தியில் இருந்த 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள வருமானவரி காலனி முதல் தெருவில் அக்னல் டயாஸ் என்பவர் அந்தமானில் உள்ள கப்பல் நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரான்சிடா சைனி பழைய குயவர் பாளையத்தில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடந்த நிலையில் பிரான்சிடா சைனி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏதோ விரக்தியில் இருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

அதன்பின் அவர் திடீரென பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துள்ளார். இந்நிலையில் நெடுநேரமாக பிரான்சிடா சைனி தனது அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அறையின் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் பிரான்சிடா சைனி எந்த சத்தமும் கொடுக்காததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் அறைக்குள் தூக்கில்  சடலமாக தொங்கியுள்ளார்.

அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த பிரான்சிடா சைனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினருக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் பிரான்சிடா சைனி உங்களிடம் சொல்லாமல் பிரிந்து செல்வது வேதனை தருகிறது என்றும் நான் அம்மாவை மிகவும் நேசிக்கிறேன் என்றும் எழுதியிருந்தார். இதனையடுத்து அந்த மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம்? என்ற விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |