கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கி இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினித் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினித்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.