Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன காரணமா இருக்கும்…? மீன் வியாபாரியின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டில் தனியாக இருந்த மீன் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேசுவரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் மீன் மார்கெட்டில் வியாபாரம் செய்து வருகின்றார். எனவே மீன் வியாபாரத்திற்காக செந்தில்குமார் ராமநாதபுரத்தில் தனியாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த அவர் விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து செந்தில்குமார் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |