வாலிபரை நண்பர்கள் இணைந்து ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சந்துரு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்துரு இரவு நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் டிபன் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரங்கன் என்பவர் தனது நண்பர்களுடன் சென்று சந்துருவிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து ரங்கன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்துருவை வெட்டியுள்ளார். இதனால் சந்துரு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் ரங்கனும், அவரது நண்பர்களும் விடாமல் சந்துருவை துரத்தி சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சந்துருவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரங்கன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து சந்துருவை கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.