வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தநல்லூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத்குமார் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது திருச்சியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த பரத்குமார் அதே பகுதியில் அமைந்துள்ள பாத்திர குடோனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பரத்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.