Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்?…. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் அதே பகுதியில் அமைந்துள்ள ஏரி கரையில் கடந்த 13-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த உதயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உதயகுமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |