Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வார்டன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வார்டன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் காசிராமன்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5 வருடங்களாக மத்திய புழல் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதி சிறையில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இவர் புழல் சிறை வளாகத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் திடீரென காசிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காசிராஜன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |