Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் மோகன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்துள்ளார். இந்நிலையில் மோகன் அவரது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து நாராயணபுரம் பகுதியில் இருக்கும் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |