வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் தொழிலாளியான ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரவிசங்கர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த ரவிசங்கரின் பெற்றோர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.