Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? 8 மாத குழந்தையை தவிக்க விட்டு…. தாய் எடுத்த விபரீத முடிவு….!!

8 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நேரு நகரில் குடியிருந்து வருபவர் வடிவேல். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், கோகிலப்பிரியா, திவ்யா (24) என்ற 2 மகள்களும் உள்ளார்கள். வடிவேலு புங்கம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வருகின்றார். சென்னையில் கோகுல பிரியா கணவருடன் வசித்து வருகின்றார்.

திவ்யாவுக்கு ஈரோட்டில் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் குடியிருந்து வரும் கவியரசன் என்பவருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திவ்யா தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். இதையடுத்து திவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது அந்த குழந்தை பிறந்து எட்டு மாதம் ஆகியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடிவேலும், பொற்கொடியும் சாப்பிட்டுவிட்டு கீழேயும், திவ்யாவும் குழந்தையும் மாடி அறையிலும் தூங்கி கொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென்று நள்ளிரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு வடிவேலும் பொற்கொடியும் மாடிக்கு சென்று பார்த்தபோது, திவ்யா மின் விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் திவ்யாவை மீட்டு தனியார் ஆம்புலன்சில் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தார்கள். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்த மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து திவ்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |