வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கொல்லை கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன் குமார்(23) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் குமார் இளவரசன் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு விருதாச்சலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அருணாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.