அமெரிக்க கடற்படையினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்பட்டு பேராயுதமாக இருக்கிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசியை போடுவதில் அனைத்து சாமானிய மக்களும், படை வீரர்களும் கொஞ்சம் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 240 வீரர்கள் மறுத்துவிட்டதால் அவர்களை பணி நீக்கம் செய்துள்ளனர.
குறிப்பாக அங்கு 8000 கடற்படை வீரர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளாததால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டிருந்த்தது.