Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமை இது..! மகனின் உடலை பைக்கில் எடுத்து சென்ற தந்தை….பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

இறந்த தம் மகனின் உடலை தந்தை இருசக்கர வாகனத்தில்,எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாநிலத்தில் உள்ள, அன்னமையா என்ற மாவட்டத்தில் உள்ள சிட் வேல் கிராமத்தைச் சேர்ந்த, ஜெசேவா என்ற சிறுவன், சீறுநீரகக் கோளாறு காரணமாக, திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர். ரூயா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மகனின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல, அவரது தந்தை முடிவு செய்தார். ஆனால், இவரது சொந்த கிராமம், மருத்துவமனையில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், மகனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிக கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் அவர் செய்வதறியாது திகைத்து போய் நின்றுள்ளார். இதைத் தொடர்ந்து, சிட்வேல் கிராமத்தைச் சேர்ந்த, ஸ்ரீகாந்த் யாதவ் என்பவர், உயிரிழந்த சிறுவன் உடலை மற்றொரு ஆம்புலன்சில் இலவசமாக எடுத்து வர ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் சிண்டிகேட் பிரச்னை காரணமாக, அந்த ஆம்புலன்சை மருத்துவமனைக்குள் நுழைய தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து உடல் வெளியேற வேண்டும் என்றால், அது தங்களுடைய ஆம்புலன்ஸ் மூலம் தான் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கறார் காட்டி உள்ளனர். மேலும் இதனால் கடும் வேதனை அடைந்த அந்த சிறுவனின் தந்தை, தனது உறவினரின் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, அவரது மகனின் உடலை தோளில் சுமந்தபடி சென்ற வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

Categories

Tech |