Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என்ன கேவலமா பேசிடாங்க”வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடல் ஏரிக்கரை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாரை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த வினோத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |