Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” என்ன கைவிட்டிராதிங்க உப்பிக்களே ” கோஷ்டியாக பதுங்கிய கவுன்சிலர்கள்…. அலறிய தி.மு.க தலைமை…!!

கவுன்சிலராக பதவி ஏற்ற 28 நபர்கள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததில் கடலூர் மாநகராட்சியில் 45 இடங்களில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்  பதவி ஏற்றனர். இன்று மேயர் மற்றும் துணை மேயருக்கான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் தி.மு.க சார்பில் மேயர் பதவிக்கு சுந்தரி என்பவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் தாமரைச்செல்வன் என்பவர் துணைமேயர் பதவிக்கும் போட்டியிட்டுள்ளனர். இதனையடுத்து  கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க மற்றும் அ.தி.மு.க வை சேர்ந்த 28 வேட்பாளர்கள் திடீரென மயமாகியுள்ளனர். எனவே கட்சி நிர்வாகிகள் காணாமல் போன அந்த 28 பேருக்கும் கைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் அந்த அழைப்பை எடுக்கவில்லை.

இதற்கிடையில் தி.மு.க வை சேர்ந்த  2 வேட்பாளர்கள் மேயர் பதவிக்கு போட்டியிட்டுள்ளதாகவும், ஆனால் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பும் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தி.மு.க சார்பில் போட்டியிட நினைத்த மற்றொரு வேட்பாளர் இந்த 28 வேட்பாளர்களின் ஆதரவையும் திரட்டி உள்ளார். இதன் காரணமாக அவர்களை புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்க வைத்துள்ளார். மேலும் 20 பேர் மட்டுமே அந்த ஹோட்டலில் தங்கி இருப்பதாகவும், மீதமுள்ள  8 பேர் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |