Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை இது…? சிறுவனை தாக்கும் இளைஞர்கள் கும்பல்…. 20 பேரின் செயலுக்கு காரணம் என்ன…?

பிரிட்டன்  நாட்டில் பள்ளி மாணவனை 20 நபர்கள் கொண்ட இளைஞர்கள் தாக்கும் வீடியோவானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியா East Yorkshire-ன் Hull என்ற பகுதியினை சார்ந்த சிறுவன் ஒருவனை இளைஞர்கள் கும்பல் தாக்கியுள்ளது. இத்தகைய காட்சியினை அச்சிறுவனின் தந்தை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, என்ன நடக்கிறது என்பதனை மக்கள் அனைவரும் பாருங்கள் என குறிப்பிட்டுருக்கின்றார். அத்தகைய வீடியோவில், சிறுவன் தன் காதுகளை மூடிக் கொண்டிருக்கும் நிலையில், சுற்றியுள்ள இளைஞர்கள் சத்தமிடுவதை காண முடிகின்றது. மேலும் சிறுவனை கும்பலில் உள்ள ஒரு இளைஞன் உதைத்துள்ளான்.

பின்னர் தொடர்ச்சியாக அக்கும்பலில் இருக்கின்ற சிலர் அவனை நோக்கி கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் எழுந்து ஓடிய சிறுவனை மீண்டும் கீழே தள்ளுகின்றனர். இத்தகைய வீடியோவில் சில குரல்கள் பதிவாகியுள்ளன. அதில் பெண் ஒருவர் நான் மிகவும் பயப்படுகிறேன் என்று சொல்வதையும், மற்றொரு சிறுவன் உண்மையில் அவனை காயப்படுத்தாதே என கூறுவதையும் தெளிவாக கேட்க இயலுகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து இளைஞர்கள் ஏன் அச்சிறுவனை தாக்கினார்கள்? என்ன நடந்தது? என்பது பற்றி எத்தகைய விவரமும் வெளியிடப்படவில்லை.

 

 

Categories

Tech |