Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன கொடுமை இது….? சுற்றுலா சென்றபோது பரிதாபம்…. ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு….!!

சுற்றுலா புறப்பட்ட வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரத்தில் இருக்கும் கீழக்கரையை சேர்ந்தவர் ஹாஜா செய்யது அஹமது (60). இவர் தன் குடும்பத்தினருடன் இன்று காலை ஆம்னி வேனில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சத்திரக்குடிக்கு அருகில் இருக்கும் தபால் சாவடி என்ற பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது.  அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் என்ற பகுதியிலிருந்து ராமேஸ்வரம்  சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் ஒன்று எதிர்பாராத விதமாக ஆமினி வேனின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் கீழக்கரையை சேர்ந்த ஹாஜா செய்யது அகமது, அகமது ஹசன் (32), ரூபீனா (58) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |