உலகில் தினந்தோறும் விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் ஒரு சில மனிதர்களின் செயல் அனைவரையும் வியக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் இவரும். அமெரிக்காவை சேர்ந்த Janathan lee riches என்பவர் உலகத்திலேயே அதிக அளவு வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து சாதனை படைத்துள்ளார். இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் கூட இடம் பெற்றுள்ளது.
அதன்பிறகு கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு கொடுத்தவர் மீது ஏதோ ஒரு காரணத்தை கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் இதுவரை தனது குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் என அனைவரின் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் பிறகு இவரை தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சியில் எதற்காக உங்களிடம் யாருமே இருக்க விரும்புவதில்லை என்று கேட்டுள்ளனர். அப்போது அவர் எந்த பதிலும் கூறாமல் சிரித்துக் கொண்டே வெளியே வந்துள்ளார். பிறகு அந்த நிகழ்ச்சியை நடத்தியவர் மீதும் தன்னிடம் கேள்வி கேட்ட அவர் மீதும் வழக்கு தொடர்ந்தார். அனைத்தையும் விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி மேல் கூட இவர் கேஸ் போட்டுள்ளார்.
தனக்குத் தொந்தரவு அளிக்கும் விதமாக யாராவது ஒரு செயலில் ஈடுபட்டால் கூட இவர் உடனே வழக்கு தொடர்வார். இவர் இதை ஒரு வேலையாகவே செய்து வருகிறார் போல. இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர் எதனால் அனைவர் மீதும் வழக்கு தொடர்கிறார் என்று. உலகில் இப்படிப்பட்ட மனிதர்கள் கூட இருக்கிறார்கள் என்பது இன்னும் பலருக்கு தெரியாமலேயே உள்ளது.