புதுவகை கொரோனா வைரஸ் ஸ்விஸ் எல்லையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் இத்தாலிய கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
ஐரோப்பாவிலேயே பிரிட்டனுக்கு அடுத்ததாக இத்தாலியில் தான் அதிகமாக கொரோனாவால் மரணங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது .இதுவரை பிரிட்டனில் 1,24,000 பேரும் அடுத்ததாக இத்தாலியில்1,00,000 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர். இதற்குமுன் தாய்லாந்தில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை வைரஸ் இப்போது சுவிஸிலும் வந்துள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் தாக்கிய நபர் சமீபத்தில்தான் எகிப்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களில் 2,744பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.