ஜப்பானில் அரசு ஊழியர்கள் 2 நிமிடத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு சென்றதால் நடவடிக்கை எடுக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் சிபாநகரில் உள்ள புனபாஷிலில் ஊழியர்கள் கல்வி வாரியத்தில் பணி புரிந்து வருகிறார்கள். அந்தக் கல்வி வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 5.15 மணிக்கு வேலையை முடித்து கிளம்ப வேண்டும். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் 5. 13 மணிக்கே பணியை முடித்துவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் நேரம் முடியும் முன்பே வெளியேறிய ஊழியர்களுக்கு ‘japantoday’ என்ற ஒரு செய்தி நிறுவனம் அவர்கள் மீது கடந்த மார்ச் 10ஆம் தேதி சம்பளக் குறைப்பு செய்துள்ளதாக செய்தி வெளியிட்டது.அதேபோல் thesankeinewsஎன்ற ஒரு செய்தி நிறுவனம் ஊழியர்கள் வேலை முடிந்து வெளியேறும் நேரத்தை விட 2 நிமிடம் முன்னதாகவே வெளியேற என்ன காரணம் என்று கேள்வி எழுப்பி உள்ளது.
அதற்கு அவர்கள் 5 .17 மணிக்கு வரும் பேருந்தை தவற விட்டால் பிறகு5.47 மணிக்கு வரும் பேருந்தில் தான் செல்ல முடியும் என்று ஊழியர்கள் பதிலளித்தனர் . அந்த காரணத்தை thesankeinews என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 2019 மே மாதம் முதல் ஜனவரி 2021 வரையிலான கால இடைவெளியில் 7 ஊழியர்கள் மீது 316 முறை இதுபோன்று 2 நிமிடம் முன்னதாகவே கிளம்பினர் என்ற புகாரை தெரிவித்துள்ளது. அதனால் கல்வி வாரியம், அலுவலக நேரத்தை விட 2 நிமிடம் முன்னதாக சென்ற 2 ஊழியருக்கு எச்சரிக்கை கடிதமும் ,மற்றும் 4 நபர்களுக்கு கடுமையாக எச்சரிக்கையும் தெரிவித்துள்ளது . மேலும் இதற்கு உதவிய பெண் (59)ஊழியர் ஒருவருக்கு வரும் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு குறைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தது . மேலும் இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.