Categories
தேசிய செய்திகள்

என்ன கொடூரம்…! மீண்டும் மீண்டும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…. வெளியான பகீர் சம்பவம்….!!!

அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த மாதம் 15ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர்கள் அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த வீடியோவை வைத்து சிறுமியிடம் யாரிடமாவது கூறினால் நாங்கள் வீடியோவை சமூக வலைத்தளங்களில் லிக் செய்து விடுவோம் என்று மிரட்டி வந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி  யாரிடமும் இதுபற்றி கூறாமல் இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர்கள் அச்சிறுமியை மீண்டும் கடந்த 19ஆம் தேதி ஒரு ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அங்கு அந்த இரண்டு பேருடன் மற்றொரு வாலிபரும் சேர்ந்து அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் தான் தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு ஆளாவதால் அச்சிறுமி நடந்தவற்றையெல்லாம் தனது அம்மாவிடம் கூறியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த அதிர்ச்சியடைந்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இச்சம்பவம்  தொடர்பாக போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து அந்த 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |