நடிகர் சிலம்பரசனின் அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த சிம்பு இயக்குனர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராகவும் திகழ்கின்றார். ஆனால் இதற்கிடையே சில காலம் பிரச்சனைகள், சர்ச்சைகள் என சிம்பு பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
அந்த நேரத்தில் அவரது ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. எனவே அவர்களுக்காக சிம்பு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும் தன் உடல் எடையை பல மடங்கு குறைத்து பழைய சிம்புவாக ரசிகர்களுக்காக மாறியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான “மாநாடு” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதோடு 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” எனும் திரைப்படமும் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
எனவே தொடர் வெற்றிகளினால் சிம்பு தற்போது உற்சாகமாக காணப்படுகின்றார். இந்நிலையில் ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு சிம்பு தன் அடுத்த படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்குகின்றார். இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.