Categories
சினிமா விமர்சனம்

என்ன சிம்ரன் இதெல்லாம்….! “இந்த இழு இழுக்குறாங்களே பா…. இணையத்தை தெறிக்க விடும் மேகா ஆகாஷ் புகைப்படம்”….!!!

நடிகை மேகா ஆகாஷ் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட புகைப்படம் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வரும் மேகா ஆகாஷ் காதலர் தினத்தன்று புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் மேகா சிகரெட் பிடித்து புகை விடுமாறு இருந்தது. மேகா ஆகாஷா இப்படி செய்கிறார் என விமர்சித்து வருகின்றனர். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்து மாடலாக இருந்து பின்பு நடிகையானார். பிறந்தது சென்னையாக இருந்தாலும் திரைப்படத்தில் அறிமுகமானது தெலுங்கு திரைப்படம். இவர் தமிழில் பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்பொழுது யாதும் ஊரே யாவரும் கேளிர், மழை பிடிக்காத மனிதன் முதலிய ஐந்து படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தை அபிமன்யு இயற்றுகின்றார். மேலும் இத்திரைப்படத்தை மேகாவின் அம்மாவான பிந்து ஆகாஷ் தயாரிக்கின்றார்.

இதனையடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு இவர் நடிக்கும் இத்திரைப்படத்தின் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் மேகா சிகரெட் பிடித்து புகையை விடுவது முகத்தை மறைக்கும் அளவுக்கு இடம் பெற்றுள்ளது. இதனால் இணையதளவாசிகள் மேகாவை விமர்சித்து  வருகின்றனர். இவ்வாறு புகைபிடிப்பது, மது அருந்துதல் உள்ளிட்டவை அடங்கியிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது. இதையடுத்து போஸ்டரே இப்படி இருந்தால் படம் எப்படி இருக்கும் என கேள்வி எழுந்திருக்கின்றது.

Categories

Tech |