விநாயகர் சதுர்த்தி வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபடுவது அவசியம். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பெரும் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்தியாவில் இருக்கும் 10 புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள் குறித்து காண்போம்.
1.சித்தி விநாயகர் கோவில், மும்பை
இந்த கோவில் 1801-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இது மும்பையில் இருக்கும் பிரம்மாண்ட கோவில்களில் ஒன்று. இங்கு இருக்கும் விநாயகரை வழிபட்டால் உண்மையிலேயே நாம் விரும்பியது நிறைவேறும்.
2. தக்துஷேக் ஹல்வாய் கணபதி கோவில், பூனே
இங்கு 7.5 அடி உயரமும், 4 அடி அகலமுடைய பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைந்துள்ளது. இனிப்புகளை விற்பனை செய்த தத்துஷேக் காட்வே என்பவர் தொற்று நோயால் தனது மகனை இழந்துள்ளார். பின்னர் குழந்தையை இழந்த சோகத்துடன் அவர் விநாயகர் கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. இங்கிருக்கும் விநாயகரை விலைமதிப்பற்ற தங்க நகைகளை அலங்கரித்துள்ளனர்.
3. கணபதிபுலே கோவில், ரத்னகிரி
இந்த கோவிலில் இருக்கும் கணபதி சிலை 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மேலும் இந்த சிலை இயற்கையாக உருவானது என்று நம்பப்படுகிறது. பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சூரிய ஒளியின் முதல் கதிர்கள் கோவில் மீது விழுவதாக கூறப்படுகிறது.
4.உச்சி பிள்ளையார் கோவில், திருச்சிராப்பள்ளி
இங்கு இருக்கும் பிள்ளையார் கோவில் பல்லவர்களால் பாறையில் இருந்து வெட்டப்பட்டது ஆகும். மதுரையைச் சேர்ந்த நாயக்கர் ஆட்சியாளர்கள் விஜயநகர வம்ச ஆட்சியின்போது இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர். சிறுவனாக மாறுவேடமிட்டு ஆடு மேய்க்கும் விநாயகர் விபீஷணனை விஷ்ணுவின் சிலையை வைத்திருக்கும் படி வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த விபீஷணன் தன்னை அறியாமல் விநாயகரை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த அடையாளம் விநாயகர் சிலையின் தலையிலும் இருக்கிறது.
5. காணிப்பாக்கம் விநாயகர் கோவில், சித்தூர்
சோழர்களால் கட்டப்பட்ட இந்த விநாயகர் கோவில் சிக்கலான வடிவமைப்புகளை பெற்றுள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி பிரம்மாஸ்தவத்துடன் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இங்கு 21 நாட்கள் திருவிழா நடைபெறும்.
6.மோதிதுங்ரி கணேஷ் கோவில், ஜெய்ப்பூர்
இந்த கோவில் 1761-ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். ஜெய்ப்பூரில் இருக்கும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு இருக்கும் விநாயகர் சிலை 500 ஆண்டுகள் பழமையானது.
7. களமசேரி மகாகணபதி கோவில், கேரளா
இந்த கோவிலில் விநாயகருடன் சிவன், பார்வதி தேவி மற்றும் ராமர் சிலைகளையும் பார்க்கலாம். இந்த கோவில் மிகவும் எளிமையாக இருக்கும். இங்கு இருக்கும் விநாயகரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
8. வரசித்தி விநாயகர் கோவில், சென்னை
இந்த கோவில் சென்னையில் இருக்கும் புகழ் பெற்ற கோவில் ஆகும்.. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது இந்தியா முழுவதிலும் இருந்து இசை ஆர்வலர்கள் மற்றும் யாத்ரீகர்களை ஈர்க்கும் விரிவான இசை நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெறும்.
9.கணேஷ் டாக் கோவில், காங்டாக்
இந்த கோவில் காஞ்சன்ஜங்கா மலைகளின் உச்சியில் அமைந்துள்ளது. யாத்ரீகர்கள் சுற்றுலா பயணிகள் ஆகியோர் இந்த இடத்தை புனிதமாக கருதுகின்றனர். இங்கு ஏராளமான பக்தர்கள் சென்று விநாயகர் பெருமானை தரிசனம் செய்வர்.
10. ரந்தம்பூர் கணேஷ் கோவில், ராஜஸ்தான்
இந்த கோவில் இந்தியாவின் மிக பழமையான விநாயகர் கோவில் ஆகும். கிருஷ்ணரும் அவரது மனைவி ருக்மணியும் திருமணத்தின்போது இந்த கோவிலில் ஆசி பெற்றதாக கூறப்படுகிறது. எனவே திருமண வாழ்க்கையை தொடங்குபவர்கள் இங்குள்ள விநாயகரின் ஆசியைப் பெற விரும்புகின்றனர்.