டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் அமைந்துள்ள ஆற்று ஓடையிலிருந்து டயர் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் புஷ்பலதா என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கிராம அலுவலர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் வில்லாநத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக டயர் மாட்டு வண்டிகள் சென்றது. அப்போது காவல்துறையினர் அதனை நிறுத்தி சோதனை செய்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கூவத்தூர் பகுதியில் வசிக்கும் சின்னப்பன், பீட்டர், அந்தோணி பீட்டர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய குற்றத்திற்காக அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததோடு அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.