நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், தென் மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. தென்மாவட்டங்களில் யார் யாரெல்லாம் புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறார்களோ… அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய அரசு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றால் பாதி விலை அரசாங்க கொடுக்கிறது. 9 லட்சம் ரூபாய் என்றால் நாலரை லட்சம் ரூபாயை அரசாங்கம் கொடுக்கின்றது. தொழில் துவங்குவதற்கு மானியம் கொடுக்கிறது.
அல் கராஃபி எண்ணெய் நிறுவனம் தூத்துக்குடியில் இருக்குது. அதற்கு கிட்டத்தட்ட 100 சதவீத மானியம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இன்னைக்கு நேரடியாக 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், மறைமுகமாக ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். கிட்டத்தட்ட 40,000 கோடி அந்த அளவுக்கு இரண்டு கட்டமாக முதலீடு செய்ய இருக்கின்றார்கள். அல் கராஃபி எண்ணெய் நிறுவனம் ஒரு மிகப்பெரிய திட்டம்.
இன்று சென்னை எல்லாம் இவ்வளவு மானியம் கொடுக்கிறது கொடுப்பதில்லை….. சலுகை கொடுப்பதில்லை…. தென்மாவட்டங்களில் அதிகமான தொழிற்சாலை வரவேண்டும் என்று அரசு எண்ணித்தான் இவ்வளவு சலுகைகள் கொடுக்கின்றது. அரசு சலுகைகளை அறிவிக்கும் தொழில் துவங்க விரும்புபவர்கள் தானே இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் எடுக்க முடியாது. அவர்கள் தான் முதலீடு செய்கிறார்கள், முதலீடு செய்பவர்களுக்கு அரசு ஊக்குவிக்கிறது.
மானியம் கொடுக்கிறது, சிங்கிள் விண்டோஸில் அனைத்து அனுமதியும் விரைவாக கொடுக்கின்றோம். எந்தெந்த வகையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமோ அத்தனை வகையிலும் தொழில் துவங்குகின்றவர்களுக்கு உதவி செய்ய அரசு தயாராக இருக்கின்றது.