ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயதான சாய்ராம். இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குடிக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு தாய், தந்தையரை துன்புறுத்தி வந்துள்ளார். திருந்துவதற்காக மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத பெற்றோர்கள் கூலிப்படையை வைத்து தன்னுடைய மகனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து எட்டு லட்சம் கொடுத்து கூலிப்படையை தயார் செய்து தன்னுடைய மகனை கொலை திட்டமிட்டுள்ளனர்.
பின் அக்டோபர் 18ஆம் தேதி அன்று சாய்ராம் கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்டுள்ளார். மறுநாள் காவல்துறையினர் இந்த உடலை கண்டெடுத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தியதில் தங்கள் மகனை கூலிப்படை வைத்து கொலை செய்ததை தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தங்கள் மகனை கொலை செய்த குற்றத்திற்கு ஆக பெற்றோர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கூலிப்படையை சேர்ந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.