பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹ்ரீம் ஷா என்ற டிக்டாக் பிரபலம் லண்டனுக்கு தனது உதட்டை பெரிதாக்கி அழகுபடுத்துவதற்காக சென்றுள்ளார். அங்கு ஊசி மூலம் அவருடைய உதட்டின் ஒரு பகுதியை பெரிதுபடுத்தியுள்ளனர். மேலும் ஹ்ரீம் ஷா பிரத்தியேக சிகிச்சை ஒன்றையும் இதற்காக எடுத்துக் கொண்டார். தற்போது அவருடைய உதட்டின் ஒரு பகுதி வீங்கியது போல் காணப்படுகிறது. மேலும் அந்நாட்டின் பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி அவருடைய வங்கி கணக்கையும் முடக்கியுள்ளது.
இதை அறிந்த ஹரீம் ஷா “லிப் ஃபில்லர்” சிகிச்சையை பாதியிலேயே கைவிட்டார். இதனால் அவருடைய உதடு தற்போது வீங்கி காணப்படுகிறது. மேலும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதால் சிகிச்சைக்கும் பணம் இல்லாமல் தற்போது என்ன செய்வது ? என்று தெரியாமல் புலம்பி வருவதாக ஹ்ரீம் ஷா வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.