புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது.
முதலமைச்சரின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்றால் நேற்று முதல் அமைச்சர் நாராயணசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து விட்டு, நாளை காலை பேரவைக்கு செல்வதற்கு முன்பாக நாங்கள் ஆலோசனை செய்து முடிவு செய்வோம் என்றார். அந்த வகையில் பேரவைக்கு புறப்படுவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பேரவை வருவதற்கு தயாராக இருக்கின்றார். முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவைக்கு வருகின்றார்கள். முதல்வர் நாராயணசாமி பேரவை தொடங்கிய உடனேயே தன்னுடைய பெரும்பான்மை நிரூபிப்பதற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் குறித்து பேசுவார். அப்போது சபாநாயகர் 3 நியமன உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு உரிமை உரிமை இல்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்தால் தற்போது இருக்கக்கூடிய காங்கிரஸ் – திமுக கூட்டணி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி என இருவருமே 11 இடங்களுக்கு சென்று விடுவார்கள்.
இதனால் காங்கிரஸ் அரசுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும், அவ்வாறு பெரும்பான்மையை நிரூபித்து விட்டு சட்டமன்றத்தை கலைப்பதற்கு நாராயணன் ராஜினாமா செய்வதற்கு தயாராக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை என்ற சபாநாயகர் அறிவித்து விட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கின்றார்.