தடையை மீறி மது விற்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் தடையை மீறி மது விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் குளித்தலை சுற்றியுள்ள பரலி நால்ரோடு, சிவாயம், கருங்கலால் பள்ளி, அய்யர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்த்தபோது மது விற்கப்படுவது உறுதியானது.
இதனையடுத்து அங்கு மது விற்று கொண்டிருந்த காரணத்திற்காக குமார், சிவானந்தம், கணேசன், வையாபுரி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.