மணல் கடத்தி சென்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகாரைக்காடு காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணல்களை கடத்துவதாக நத்தம் ஊராட்சி கிராம அலுவலர் குகன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து பாலசமுத்திரத்தில் வசிக்கும் சுரேஷ்குமார், சக்திவேல், சந்தோஷ் குமார் மற்றும் மூன்று சிறுவர்கள் சேர்ந்து காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணல்களை நான்கு மோட்டார் சைக்ககளில் கடத்தி வந்தனர்.
அப்போது காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அதன் பின் காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 12 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.