Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டான்… இதுதான் ஒரே வழி… மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு.!!

திருட்டு வழக்கில் கைதான வாலிபரை பெரம்பலூர் காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் காந்தி நகரில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் (22) என்ற மகன் உள்ளார். இவரை திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்த பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல்துறையினர் திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் விடுதலையாகி வெளியில் வந்தால் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.

இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரின் பரிந்துரையின்படி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு விஜயை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருச்சி சிறையில் உள்ள விஜயிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |