துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞர் மறைந்த டயானா மைக்கேல் ஜாக்சன் போன்ற பிரபலங்கள் இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனை வடிவத்தை பகிர்ந்துள்ளார்.
துருக்கி நாட்டை சேர்ந்த ஆர்பெர் யெசில்டாஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு கற்பனை விஷயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி மறைந்த இளவரசி டயானா, பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார்கள்? என்று தனது கற்பனையை தட்டி எழுப்பியுள்ளார். அதன் முயற்சியாக அவர் வரைந்த உருவங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த பிரபலங்களுக்கு மரணம் என்ற சில பெரிய விஷயங்கள் நடந்திருக்காவிட்டால் அவர்கள் இன்று எப்படி காணப்படுவார்கள் என்ற கேள்வி இந்த படைப்புக்கு பின்னால் உள்ளது. இது குறித்து உங்களது பார்வைகள் மற்றும் விமர்சனங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள் என்றும் ஆல்பர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஓவியத்தில் பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கருப்பு வெள்ளை நிறத்தில் தலையில் நிறைய முடியுடன் சிரித்தபடி காணப்படுகின்றார். அவரது உடலில் வயது முதிர்வுக்கான அடையாளங்கள் தென்படுகின்றன. மேலும் தோல் சுருக்கம் விழுந்து காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இளவரசி டயானா இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார் என்ற புகைப்படம் ஒன்றையும் அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். அதில் டயானா அதே மெலிந்த தேகம் வெந்நிற தலைமுடியுடன் காணப்பட்டாலும் சற்று வயது முதிர்வுக்கான தோல் சுருக்கங்களுடனும் அவர் காணப்படுகின்றார். மேலும் இது தவிர ஹீத் லெட்ஜர், பால் வாக்கர், ஜான் லென்னான், எமி ஒயின்ஹவுஸ் மற்றும் பிரெட்டீ மெர்குரி உள்ளிட்ட சிலரது புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.