தாடியை கிண்டல் செய்த நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் லட்சுமணன் என்பவரும் பணிபுரிந்து வந்தார். வேலை முடிந்து இருவரும் மணிக்கூண்டு அருகே சாலையோரமாக தங்கியிருந்தனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டிருந்த போது கோவிலுக்கு வேண்டி கொண்டு லட்சுமணன் வளத்தை தாடியை பெருமாள் கிண்டல் செய்துள்ளார்.
இதனால் இருவரிடையே தகராறு உருவாகியுள்ளது. இதில் கோபம் கொண்ட லட்சுமணன் தான் வைத்திருந்த ஆக்ஸா பிளேடு வைத்து பெருமாளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். அதன்பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பெருமாளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு லட்சுமணனை கைது செய்தனர்.