நாடு முழுவதும் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து தேர்தல்கள் பல மாநிலங்களில் நடைபெற தொடங்கிவிட்டன. அந்த வகையில், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மாநகராட்சி தேர்தலில் வென்றால் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை மாநகராட்சியே செலுத்தும் என இளம் வாக்காளர்களை கவர பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
தற்போது இந்த வாக்குறுதி பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பாஜக இது போன்ற வாக்குறுதிகள் மூலம் சாலை விதிமீறல்கள் போன்ற தவறுகளை செய்ய தூண்டுவது போல் உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதன் காரணமாக பெரும் விபத்து நேரிட வாய்ப்புள்ளதாகவும் கூறிவருகின்றனர்.