நடிகை ஸ்ரீதிவ்யா முதன்முதலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி பிறந்தார். இவர் 2006-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான பாரதி என்ற திரைப்படத்திற்கு சிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருதை வென்றார்.
பிறகு நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலக்கி இருப்பார். இதையடுத்து இவர் பல படங்களில் நடித்து மக்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் வெள்ளக்கார துரை என்ற படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் அவருடன் டைகர் எனும் படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டைகர் படத்திற்கு இயக்குனர் முத்தையா கதை வசனம் எழுத உள்ளதாகவும், இயக்குனர் கார்த்தி இப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டைகர் படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.