மங்களூரில் உள்ள திரையரங்கில் “காந்தாரா” படம் ஓடிக்கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் விசித்திரமாக நடந்து கொண்டார்.
கன்னடத்தில் இயக்குனர் பிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியான “காந்தாரா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வசூல் ரீதியாகவும் “காந்தாரா” படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மங்களூர் பிவிஆர் மாலில் “காந்தாரா” திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென பெண் ஒருவர் விசித்திரமாக நடந்து கொண்டார். அந்தப் பெண் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று உரக்க கத்தி கூச்சல் போடுகின்றார். அந்தப் பெண் விடாமல் கத்தி கூச்சல் போடவே அரை மணி நேரத்துக்கு படம் திரையிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தப் பெண் சுயநினைவுக்கு திரும்பியதும் மீண்டும் படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்த “காந்தாரா” திரைப்படத்தின் கதைக்கரு என்பது ஒரு நிலத்திற்கான போராட்டம் சம்பந்தப்பட்டது. இந்த போராட்டத்தை தொன்மம், அமானுஷ்யம் மற்றும் ஆக்ஷன் நாட்டுப்புற கதைகள் போன்றவற்றை எல்லாம் கலந்து ஒரு மகத்தான திரைப்படத்தை தந்திருக்கின்றார் ரிஷப் செட்டி. இந்த திரைப்படத்தை சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.