Categories
தேசிய செய்திகள்

என்ன நடக்கிறது காங்கிரசில்?… சித்து விலகிய நிலையில்… அமைச்சர் ரஸியா சுல்தானா ராஜினாமா!!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சித்து விலகிய நிலையில், அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் – நவ்ஜோத் சிங் சித்து இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து அண்மையில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அம்ரிந்தர் சிங் விலகினார்.. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வராக சரண்ஜித் சிங் பொறுப்பேற்று,  அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த சூழலில் இன்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்தார்.. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் சித்து.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் பஞ்சாப் கேபினட் அமைச்சராக பதவியேற்ற ரஜியா சுல்தானா ராஜினாமா செய்துள்ளார்.. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சித்து விலகிய நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ரஸியா கூறியுள்ளார்.

பஞ்சாபில் அம்ரிந்தர் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகிய நிலையில், அங்கு அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |