பாம்பு ஒன்றை அசால்டாய் தூக்கிப் போட்டு மாஸ் காட்டும் குழந்தையின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முற்றத்தில் ஒரு குழந்தை விளையாடி கொண்டிருக்கிறது. அப்போது கொஞ்ச நேரத்திற்கு பின் ஆபத்தான தோற்றமுடைய ஒரு பாம்பு குழந்தையின் பக்கத்தில் செல்கிறது. பின் குழந்தையின் அருகில் சென்று அது இயல்பாக ஆடிக் கொண்டிருக்கிறது.
அது தன் முகத்தை முன்னோக்கி நகர்த்தியவுடன், குழந்தை வேடிக்கையாக அந்த பாம்பை பிடிக்கிறது. இந்த விளையாட்டு நீண்டநேரம் நீடிக்கிறது. அதன்பின் பாம்பை பிடித்த குழந்தை அதை ஒரு ஓரமாக தள்ளிவிடுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு வீடியோ எடுப்பதற்கென குழந்தையை ஆபத்தில் ஆழ்த்திய நபர்களை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram