Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகனை காணாமல் தவித்த பெற்றோர்… மர்மமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

சிவகங்கை அருகே டிரைவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி வாசக சாலை வீதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்தி வெளியில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் கார்த்தி செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போனையும் எடுத்து அவர் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் வாலிபர் ஒருவர் சிலம்பணி ஊரணி பகுதியில் பிணமாக கிடப்பதாக தேவகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்தது டிரைவர் கார்த்திக் என்பது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்திக்கின் பெற்றோருக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த கார்த்திக்கின் பெற்றோர்கள் மகன் சடலமாக கிடப்பதை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து கார்த்திக்கு எதற்காக கொலை செய்யப்பட்டார் ? உடலை ஊரணி பகுதியில் வீசி சென்றவர்கள் யார் ?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கார்த்திக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அய்யனார் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கார்த்திக் வீட்டிற்கு சென்று ஐயனார் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் அய்யனாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |