Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல…. பிணமாக கிடந்த தொழிலாளி… போலீஸ் விசாரணை..!!

நாகையில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை அருகில் தேவநதி உள்ளது. அங்கு ஆண் சடலம் மிதப்பதாக நாகை டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்தவர் நாகை மாங்கொட்டை சுவாமிநாதர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த கிருபா (50) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் வண்டி ஓட்டும் தொழிலாளி என்பதும் தெரிந்தது. இதுகுறித்து கிருபா மனைவி வெண்ணிலா நாகை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து அவர் சாவில் மர்மம் ஏதும் உள்ளதா ? எப்படி இறந்தார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |