பெரம்பலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் ராஜேந்திரன் (46) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் கடந்த 17-ம் தேதி யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.