மதுரையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆட்டோ டிரைவரான தங்கபாண்டியன் என்பவரும், அவரது மனைவி இளவரசி என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் இளவரசி வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று இளவரசியை மீட்டனர்.
அதன்பின் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்