நடிகர் தனுஷ் புதிய படத்தை இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் ப.பாண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு நாகார்ஜுன், எஸ்.ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சரத்குமார், அதிதி ராவ் ஆகியோரை வைத்து ஒரு படம் இயக்கினார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது, ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர், தனுஷ் ஒரு படத்தை தானே இயக்கி அதில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் அது ஒரு காமெடி படம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தப் படத்தில் தனுஷுடன் சேர்ந்து ரோபோ சங்கர் மற்றும் ராமனும் நடிக்கிறார்களாம். இந்த படத்தில் நாகார்ஜூனா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்து விட்டதாம். எனவே மீதி காட்சிகளை எடுத்து படத்தை ரிலீஸ் செய்யலாமா என்ற யோசனையில் தனுஷ் இருக்கிறாராம். இந்த படத்தை தூசி தட்டினால் அதில் ரோபோ சங்கர் மற்றும் ராமரும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் பழைய படத்தை தனுஷ் தூசி தட்டப்போகிறாரா இல்லையெனில் புது படம் இயக்க போகிறார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.